பல கோடிக்கு அதிபதியாகும் அனிருத்.. கலாநிதி மாறனின் மகளுடன் காதலா?

பல கோடிக்கு அதிபதியாகும் அனிருத்.. கலாநிதி மாறனின் மகளுடன் காதலா? என்கின்ற செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அனிருத் ரவிச்சந்தர், சமீபகாலமாக காதலிப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகளும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனை அனிருத் காதலிப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கள் பரவி கொண்டிருக்கின்றன… இதை இரு தரப்பிலும் இன்னும் உறுதிப்படுத்தவுமில்லை, மறுக்கவும் இல்லை..

Puthiya Sinthanai என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் “அனிருத் – காவ்யா மாறன் இருவரும் காதலிப்பது நிஜம் போல தெரிகிறது.. ஆனால், இது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை.. அமெரிக்காவில் உள்ள வேகாஸில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரமும் உள்ளது..ஆனால், இது பெரிய இடத்து விவகாரம் என்பதால், வெளியே இதுவரை தெரியவில்லை.. மீடியாக்களிலும் இந்த செய்தியை வெளியிட பலர் தயங்குகிறார்கள்.. சன் ரைஸர்ஸ் அணியிலேயே இருவரும் ஒன்றாக சேர்ந்துதான் அந்த போட்டியை பார்த்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.. இவர்கள் காதலிப்பதாக தகவல் கசிந்து 2 நாளாகிவிட்டது. ஆனால், இன்னும் இரு தரப்பிலுமே இதை மறுக்கவில்லை..

அனிருத் குடும்பம் மிகப்பெரியது.. பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் குடும்பத்தை சேர்ந்தவர்.சும்மா இருந்த அனிருத்தை மியூசிக் போட வைத்ததே தனுஷ்தான்..ஆண்ட்ரியாவை திருமணம் செய்ய போவதாக ஏற்கனவே ஒருமுறை வதந்தி பரவின.. ஒய் திஸ் கொலவெறி முதல் ரஜினி படம் வரை அனிருத் இசையமைத்து விட்டார்.. அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இருவரையும் மிக்ஸ் செய்து மியூசிக் செய்பவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *