எத்தியோப்பியாச் சென்ற பிரதமர்..!

Advertisements

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக எத்தியோப்பியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் அபி அகமது அலி தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.

ஜோர்டானில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகருக்குச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் அபி அகமது அலி மோடியை வரவேற்றார். அந்நாட்டுக் கலைக்குழுவினர் நடனமாடி அவரை வரவேற்றனர். எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலியும் இந்திய பிரதமர் மோடியும் உரையாடி மகிழ்ந்தனர். அப்போது பிரதமருக்குத் தேநீர் விருந்தளிக்கப்பட்டது. இதையடுத்து. பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருதை அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி வழங்கி கௌரவித்தார். இந்த, விருது பெறும் முதல் உலக தலைவர் இந்தியப் பிரதமர் மோடியே ஆவார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *