TRB Exam: பேச்சுவார்த்தையில் தோல்வியால் போராட்டம் அறிவிப்பு!

Advertisements

தொடர் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் அரசாணை 149 ரத்து செய்யப்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *