
புளியங்குடி மனோ கல்லூரி மற்றும் மருதம் பயிற்சி மையம் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 1000 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புளியங்குடி மனோ கல்லூரி , மருதம் பயிற்சி மையம் மற்றும் மக்கள் உதவி கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புளியங்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மனோ கல்லூரி முதல்வர் முனைவர் திரு. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். மருதம் பயிற்சி மையம் ஒருங்கிணைப்பாளர் திரு. கற்பகராஜா முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் திரு. தமிழ்பிரியன் வரவேற்புரை வழங்கினார். சாலை பாதுகாப்பு ஊர்வலத்தை புளியங்குடி நகர சேர்மன் திருமதி. விஜயா சௌந்தராஜன் மற்றும் புளியங்குடி காவல் ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் உதவி கூட்டமைப்பினர் ஒரு சொல் மணி, சாவனா செய்யது, ஹோட்டல் வெள்ளத்துரை ஐயூப் , பீரப்பா, மருதம் பயிற்சி மையம் ஆசிரியர்கள் வி.ஆர். முருகேசன், கிருஷ்ண குமார், அருண் குமார், சுந்தர் ராஜ், துரை, மகேஸ் குமார், சிவா, மாரி ராஜ், முத்து ராஜ், சுரேஷ் குமார், காளிராஜ், மருதம் அறக்கட்டளை தலைவி இந்துமதி, செயலாளர் சுரேஷ் குமார், சந்தோஷ் , அறக்கட்டளை உறுப்பினர்கள் சேகர், இராம், கண்ணன், அய்யப்பன், முத்துராஜ், பரத், நவீன், செல்வமணி, மாரிமுத்து, மதன் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 1000 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் மனோ கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சுரேஷ் குமார் நன்றி கூறினார்.


