Manjula Vijayakumar: மரண ரகசியம்!

Advertisements

மஞ்சுளாவின் மரண ரகசியம்பற்றி வனிதா பரபரப்பு பேட்டி…

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகராகத் திகழ்பவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா. இவரது மகள் வனிதா எனப் பலரும் நடிப்புத் துறையைச் சேர்ந்தவர்கள். நடிகை மஞ்சுளா எம்ஜிஆர் உடன் நடித்துப் புகழ் பெற்றவர்.

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் ஏராளமான சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு.அந்த வகையில் வனிதாவுக்கும் நடிகர் விஜயகுமாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வனிதா வீட்டை விட்டு வெளியே வந்தார்.

தனியாக வாழ்ந்து வந்தார்.மஞ்சுளாவும் கூட வனிதா மீது மிகுந்த கோபத்தில் தான் இருந்தார் “.என் வயிற்றில் வனிதா பிறந்ததே பாவம்… கேவலம் “என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை மஞ்சுளா மரணம் அடைந்தார்.இந்த நிலையில் நடிகை வனிதா நடிகை சகிலாவுடன் பேட்டி ஒன்றில் கூறியபோது மஞ்சுளா பற்றிப் பல தகவல்களைத் தெரிவித்து இருக்கிறார். எனது தாயார் மஞ்சுளா ம மதுவுக்கு அடிமையாகத் திகழ்ந்தார்.

எந்த நேரமும் குடித்துக் கொண்டே இருப்பார்.அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலை நோய் வந்தது. அப்பொழுது கூடக் குடித்துக் கொண்டுதான் இருந்தார்.அவரால் குடியைவிட முடியவில்லை.

இறப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக என்னை அழைத்துப் பேசினார். பிரபலமான வழக்கறிஞர் ராம் ஜெத் மலானியை அழைத்து. அனைத்து சொத்துகளிலும் எனது தாயார் பெயரைச் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.என்னை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தந்தை விஜயகுமாரிடமும் கூறினார்.

எல்லா சொத்துக்களிலும் மகள்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இதையெல்லாம் வீடியோவாக என்னை எடுக்கச் சொன்னார். நான் தான் எடுக்காமல் விட்டு விட்டேன்.இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறி இருக்கிறார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *