விரைவில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்……..!

Advertisements

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது நீண்ட கால நண்பரைக் கரம் பிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இருவருக்கும் இடையே 15 வருட காதல் பந்தம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஏற்கனவே, நடிகை கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் என்று பல முறை செய்திகள் வலம் வந்த நிலையில், அவையெல்லாம் வதந்தி என்று மறுத்து வந்த கீர்த்தி சுரேஷின் தந்தை இந்தச் செய்திக்கு இதுவரை மறுப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால நண்பர் ஆண்டனியை திருமணம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. 15 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் டிசம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *