
டெல்லி: இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் குழு மணிப்பூர் செல்ல முடிவு செய்துள்ளது. கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து நிலவரத்தை அறிய இந்தியா கூட்டணி குழு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாகவே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை வன்முறையாக மாறி பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நேற்றைய தினம் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை கை வைத்து இழுத்து செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த செயலுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட இச்சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனியையே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் குழு நாளை மறுநாள் மணிப்பூர் செல்ல முடிவு செய்துள்ளது. கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இந்தியா கூட்டணி குழு முடிவு செய்துள்ளது.
3 பெண்களை நிர்வாணமாக்கி கொடூரமாக நடத்திய வீடியோ வெளியான நிலையில் மணிப்பூர் செல்கின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி மணிப்பூர் சென்று மக்களை சந்தித்த நிலையில், எதிர்க்கட்சிகள் குழு மணிப்பூர் செல்கிறது.


