மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

Advertisements

இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘பி.ஜி. நீட்’ என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் புதிய தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

Advertisements

இந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *