850 எம்.பி.க்கள் விரிவாக்கம்.. ஜனநாயகத்துக்கு ஆபத்து.! – ராகுல் காந்தி எச்சரிக்கை.!

நாடாளுமன்றத்தில் இடங்களை 850 ஆக விரிவாக்கம் செய்வது, இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா அணியின் மூத்த தலைவர்களும், நானும் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொகுதி மறுவரையறை அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரையும் திமுகவையும் கேட்டுக்கொள்வதற்காக சென்னை வருவதாகத் தெரிவித்துள்ளார்.
850 இடங்களாக விரிவாக்கம் செய்வது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். இது, தங்களுக்குச் சாதகமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் மாற்றி அமைக்க பாஜகவிற்கு வரம்பற்ற வாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். தேசிய நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *