
அதிமுக கூட்டணியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 -ம் ஆண்டு ஜூலை 5 ம் தேதி மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவுநாளில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை அவரது மனைவி பொற்கொடி தொடங்கினார்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை கெஜன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் நிற்பது போல பொற்கொடியும் இரட்டை இலை சின்னத்தில் நிற்பார் என்று சொல்லப்படுகிறது..



