மண்டபம் மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள், கடந்த 3-ந் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, அனைவரையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மன்னார் நீதிமன்றம், 10 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 28-ந் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், மீண்டும் அவர்கள் சிறைக்கு அழைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *