
தமிழ் சினிமாவில் 1990களில் மிகப்பெரிய ஸ்டாராக இருந்தவர் நடிகர் கார்த்திக். பழம்பெரும் நடிகர் முத்துராமனின் வாரிசான இவருக்கு மிக எளிதாக சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அலைகள் ஓய்வதில்லை என்ற முதல் படமே மாபெரும் வெற்றியைப் பெற்றது. தன்னுடைய திறமையால் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகரானார்.
அரவிந்தசாமி போன்ற நடிகர்களுக்கு முன்னதாகப் பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்தார் என்றே கார்த்கிக்கைச் சொல்லலாம். மௌனராகம் படத்தில் இவர் நடித்த ரொமாண்டிக்கான காட்சிகள் அந்தக் கால இளசுகளைக் கிளர்ச்சி கொள்ள வைத்த ரகம்.திரைப்படங்களில் மட்டுமல்லாது நிஜத்திலும் இவர் ஒரு காதல் மன்னனாகவே இருந்துள்ளார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஏராளமான காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர் நவரச நாயகன் கார்த்திக்.
இவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பார்ட்டி போன்ற இடங்களுக்கு நிறைய பெண்களுடன வருவதாகவும் பல்வேறு கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனாலேயே, அவருடைய நிறைய பட வாய்ப்புகள் தவறிப் போனதாகவும் திரைத்துறையில் சில பேச்சுக்கள் அந்தக் காலக்கட்டத்தில் வந்த வண்ணமிருந்தன.அதே போலத் தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகை எனப் பெயர் எடுத்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கிட்டத்தட்ட 350க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இருவருடன் மட்டும் 60 படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.இந்தத் திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சிக்குத் தான் முதன்முதலில் நடிப்பதற்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இப்படிப் போட்டோ எடுக்கப்பட்ட போது, ஸ்ரீ பிரியாவையும் போட்டோ எடுக்கிறார்கள். அந்தப் போட்டோவைப் பார்த்த தயாரிப்பாளர்கள் ஸ்ரீபிரியாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
மாணிக்கத் தொட்டில் என்ற படத்தில் ஐந்து நடிகைகளில் ஒருவராக நடித்தார்.இதையடுத்து, சிவக்குமாருக்கு ஜோடியாக ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப் படத்திலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆட்டுக்கார அலமேலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 12 திரைப்படங்களில் ஸ்ரீபிரியாவும் சிவக்குமாரும் இணைந்து நடித்தார்கள்.
படப்பிடிப்பில் யாரிடமும் எதுவுமே பேசாமல், எப்போதும் இருக்கும் ஸ்ரீபிரியா, சிவக்குமாரைச் சாப்பிட்டீங்களா என்று கூடக் கேட்டது இல்லை என்கிறார்கள். சிவக்குமாரும் ஸ்ரீபிரியாவைப் பற்றி எதுவுமே கண்டு கொண்டதில்லை. எப்போதுமே ஒரு விதத் தலைக்கனத்துடன் தான் ஸ்ரீபிரியா இருந்ததாகக் கூறுகிறார்கள்.ஆனால் நவரச நாயகன் கார்த்திக்கிடம் மட்டும் முற்றிலும் வேறு ஸ்ரீபிரியாவைப் பார்க்க முடிந்தது. கார்த்திக்குடன் ‘நினைவுகள்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் ஸ்ரீபிரியாவை விட நான்கு வயது சிறியவராக இருந்த போதும், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததால், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கல்யாணக் கனவில் ஸ்ரீபிரியா இருக்க, கார்த்திக் திடீரெனச் சோலைக்குயில் படத்தில் உடன் நடித்த ராகினியைத் திருமணம் செய்து கொண்டார். இவர், நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்தான் நடிகர் கௌதம் கார்த்திக்.விஷயம் அறிந்ததும் முதலில் அதிர்ச்சியும் அப்புறமும் கோபமும் வந்து கொந்தளித்த ஸ்ரீபிரியா, கார்த்திக் எங்கே இருக்கிறார் என்று விசாரிக்க, அவர் ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஆக்ரோஷமாக அந்தப் படப்பிடிப்புத் தளத்துக்குப் போன ஸ்ரீபிரியா, கார்த்திகைச் சரமாரியாக அறைந்து அடித்து, அங்கு இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து நொறுக்கி விட்டுக் கையோடு கொண்டு போன விஷத்தைக் கார்த்திக் முன்னாலேயே குடித்து விட்டு மயங்கி விழுந்தார். கோடம்பாக்கம் அதிர்ந்து போனது. நடுநடுங்கிப் போனார் கார்த்திக்.எனினும், மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, ஸ்ரீபிரியா காப்பாற்றப்பட்டார்.
பல முன்னணி நடிகர்கள் இந்த விஷயத்தில் கார்த்திக்குக்கு ஆதரவாகத் தலையிட்டு ஸ்ரீபிரியாவைச் சமாதானப்படுத்தினர். பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது. கார்த்திக் தப்பினார். பின்னர், நடிகை லதாவின் தம்பியும், மலையாள நடிகருமான ராஜ்குமார் சேதுபதியை ஸ்ரீபிரியா திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒருமகளும் இருக்கின்றனர்.நடிகர் கார்த்திக் முதல் மனைவியுடன் திருமண வாழ்ககை நன்றாகப் போய்க் கொண்டிருந்த போதே, மனைவியின் சொந்தத் தங்கையான ரதியுடன் காதலில் இருந்துள்ளார்.
இந்த ஜோடி பலமுறை மும்பையில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் முக்கியமான பார்ட்டிகளில் கலந்து கொள்வது என்று ஜாலியாக இருந்தனர். அதன்பின் 1992ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் திரன் கார்த்திக் என்ற மகனும் உண்டு.


