
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கோதாவரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. மகாராஷ்டிரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்றுப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாசிக்கில் கோதாவரி ஆற்றோரத்தில் உள்ள சிறுகோவில்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோரப் பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
