
விஜய் அரசியலுக்கு வந்ததை நகாரீகத்துடன் வரவேற்பதாகவும், கரூர் சம்பவம் தொடர்பான, அஜித் கருத்துடன் உடன்படுவதாகவும் சென்னை-இராமாபுரத்தில் திரைப்பட நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.
சென்னை இராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையில், புதிய கல்லீரல் மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கல்லூரி மையம் திறப்பதின் மூலம் அதிநவீன எண்டோஸ்கோபி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழாவில், நடிகர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்லீரல் மையத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விஜய் மட்டுமல்ல, யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்க வேண்டும் என்றும், சமீபத்தில் சட்டசபையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, முதலமைச்சர் கலகலப்பாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதுதான் நாகரீகமான அரசியல் என்றும், அதுபோல அரசியலில் விஜய்யை வரவேற்கிறேன் என்றும், ஒரு கட்சிக்கு அரசியலில் வாய்ப்பு கொடுத்தால், 5 வருடம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், அதன்பின்னரே அதிருப்தி இருந்தால் தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அஜித் சொன்னது எனக்கு பிடித்திருந்தது என்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.


