
மொகரம் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் மொகரம் கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் அது குறித்து இஸ்லாமியப் பெருமக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி செய்தி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்கள் நீதிக்கான அவரது கடப்பாட்டை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சிகளுக்கு எதிராக உண்மையை நிலைநாட்ட மக்களை ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
