Maharashtra Budget:பெண்களுக்கு மாதம் ரூ.1500: 3 சிலிண்டர் இலவசம் அறிவிப்பு!

Advertisements

21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் துணை முதல்வரான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்தார்.

21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இவை அனைத்தும் ஜூலை மாதத்திலிருந்து அமலுக்கு வரும் வர இருக்கிறது. இந்தத் திட்டங்களுக்காகப் பட்ஜெட்டில் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *