

அன்புள்ள மகர ராசி நேயர்களே:
உங்கள் ராசிக்கு 2&ல் சனி, 8&ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது உத்தமம்.
உற்றார் உறவினர்களால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாமால் இருப்பது நல்லது.
பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வண்டி வாகனங்களால் சற்று விரயங்களை சந்திக்க நேரிடும்.
கொடுக்கல்& வாங்கலில் நெருங்கியவர்களே உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும். ஒருசிலர் செய்யும் செயல்களால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகும்.
மாத பிற்பாதியில் 9&ல் சூரியன் சஞ்சரிக்கின்றபொழுது ஒரு சில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மேலதிகாரிகளிடம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
பரிகாரம்:
ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.
சந்திராஷ்டமம் – 12-09-2023 இரவு 11.00 மணி முதல் 15-09-2023 பகல் 11.35 மணிவரை.


