Sep 2023 Monthly Rasi Palan: கும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்


அன்புள்ள கும்ப ராசி நேயர்களே:

உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் ஆகும்.

ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாகச் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் செயல்படுவது நல்லது.

தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சலும், பண விரயங்களும் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்கின்றபோது கவனமாக இருப்பது, முடிந்தவரை தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பொருளாதார ரீதியாகச் சற்று மந்தமான நிலை இருக்கும்.

உங்கள் சக்திக்கு மீறிச் செலவுகள் செய்ய நேரிடும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். புத்திர வழியிலும் தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகும்.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கான பலன்களை அடைய இடையூறுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்:

சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்- 15-09-2023 பகல் 11.35 மணி முதல் 17-09-2023 இரவு 11.08 மணிவரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *