
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில இன்று மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
அதிகாலை முதலே மாநாட்டு திடலில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. பாதுகாப்பு பணியோடு சேர்த்து ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
மாநாட்டு திடலில் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு. விஜயை தொண்டர்கள் நெருங்காத வகையில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இரவு 7.30 மணிக்கு முடிவடையும் எனத் தெரிகிறது..
தவெக தலைவர் விஜய் மாலை 4 மணியளவில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மாநாட்டு மேடையில் உரையாற்றுவார். 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து களமிறங்கி உள்ள விஜய் கட்சி தொண்டர்களை தேர்தலுக்கு தயாராக்கும் வகையில் உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்துவார் எனத் தெரிகிறது.
அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள், 2-வது அடுக்கில் போலீசார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் உள்ளது.மாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் விஜய் ஒரு சிறப்பு கொடியேற்றும் விழா நடைபெறும். இதற்காக கொடி கம்பம் அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.


