TTF Vasan: 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Advertisements

டிடிஎப் வாசனை நவம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு 3 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. அவரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 4-வது முறையாக டிடிஎப் வாசனுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 9ம் தேதி வரை டிடிஎப் வசனை நீதிமன்ற காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *