
மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது.அதிமுக சார்பில் உரிய ஆதாரங்களுடன் ஏற்கனவே புகார் அளித்திருந்தோம். முதலமைச்சரே உத்தரவிட்டு மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்ததில் இருந்தே எந்த அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை. பில் கலெக்டர் ஒப்பந்ததாரர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட மண்டல தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சியின் முன்னால் ஆணையர் தினேஷ்குமார் இந்த முறைகேடு தொடர்பாக 2024 செப்டம்பரில் கொடுத்த புகார் மீது 8 மாதங்களாக காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.
இந்த முறைகேட்டின் மூளையாக இருந்த கணினி மேற்பார்வையாளர் ரவி என்பவர் மதுரையிலிருந்து இரவோடு இரவாக ராமநாதபுரத்திற்கு பணியிடமாற்றப்பட்டார். ரவியின் மனைவி பொன்மேனி தான் மேயரின் உதவியாளராக இருந்துள்ளார். பொதுவாக மேயரின் உதவியாளராக நிர்வாக பிரிவை சேர்ந்தவரை தான் நியமிக்க வேண்டும். ஆனால் இவர்கள் பொறியாளர் பிரிவில் இருந்த வரை நியமித்திருந்தனர். ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தான்.
இந்த முறைகேடு தொடர்பாக மேயரையும் விசாரிக்க வேண்டும். மேயருக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும். மேயர் தானே மாநகராட்சிக்கு எல்லாமே.பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த முறைகேட்டை பார்த்து நொந்திருப்பார். முதலமைச்சர் நடவடிக்கை எடுத்ததே என்பது அதிமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இதுவரை இப்படி எப்போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை.


