
மதுரையில் நேற்று நடந்தது அரசியல் மாநாடுதான் என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க.வினருக்கு அடிமை சாசனம் அ.தி.மு.க எழுதிக்கொடுத்துவிட்டதாகவும், பெரியார், அண்ணா மட்டுமின்றி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரைதான் அண்ணாமலை வசைபாடி உள்ளார் என்றும், அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுவதாகக் கூறினார்.
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு தான் என்று அவர் கூறினார்.


