போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது…போலீசார் நடவடிக்கை!

Advertisements

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த். ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரசாந்திடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நுங்கம்பாக்கத்தில் நடந்த தகராறு ஒன்றில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் , பிரசாந்திடம் இருந்து போதை பொருள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உண்மையிலே பிரசாந்திடம் இருந்தது ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பெற்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர் உண்மையில் போதைப் பொருள் உபயோகித்தாரா என்பதை உறுதி செய்வதற்காக ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. இந்த பரிசோதனையின் முடிவில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தினாரா, இல்லையா என்பது தெரிய வரும். இதன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைக் கேள்விப்பட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் போதைப்பொருள் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் மற்றும் அதிமுக முன்னாள் பிரமுகரான பிரசாந்த் ஆகியோர் அளித்துள்ள தகவலில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளதாக விசாரணை நடைபெற்ற நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *