Cricket World Cup: முதல் அணியாக நுழைந்த இந்தியா!

Advertisements

இமாலய வெற்றி பெற்ற இந்தியா! முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த இந்தியா!

உலக கோப்பை லீக் போட்டியில் 302 ரனகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக  நுழைந்தஇந்திய அணி. வரலாற்று சாதனை பெற்று சாதித்துக் காட்டியது இந்தியா.

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் 13-ஆவது சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் இந்தியா,இலங்கை இடையே 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். அரை சதம் அடித்து ஆட்டத்திற்கு அடித்தளம் இட்டனர்.

அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், விராட்கோலி இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் சுப்மன் கில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 88 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுபுறம் கே.எல்.ராகுல் 21 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் அவுட்டாகினர். சிக்சர் மழை பொழிந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி  களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்கள். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தது அவுட் ஆனார்கள். இறுதியாக இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 55 ரன்கள் எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் முகமது ஷமி 5விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் , பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்வியை அடைந்து 4 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

அரையிறுதியில் நுழைந்த முதல் அணி என்ற பெருமையை பெறுகிறது இந்தியா.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *