Advertisements

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நீண்ட காலமாக போராடி வரும் சூழ்நிலையில் உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது . இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பரபரப்பான சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் .
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் . கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது ஆனால் இது குறித்து தமிழக அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருந்து வந்தது .
ஏற்கனவே பழைய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் ஆகியவை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாதது குறித்து கோரிக்கை எழுப்பி வந்தனர் . இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு 3 சதவீதாக விலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் .
இந்த நிலையில் பழைய பென்ஷன் திட்டம் குறித்து திமுக அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பது தொடர்பாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் . கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுக தரப்பில் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது . ஆனால் இன்று வரை அதற்கான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை .
இது தொடர்பாக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் . திமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில் இன்னமும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது அரசு ஊழியர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது .
பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்களின் மிக முக்கியமான கோரிக்கையாகும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்கள் எந்த பங்களிப்பையும் செலுத்த வேண்டியதில்லை . ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிட்ட அளவு பங்களிப்பு செலுத்த வேண்டும் . அது மட்டுமல்லாது ஓய்வூதியமும் மிக குறைவாகவே கிடைக்கும் இதனால்தான் அரசு ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் .
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது . திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். திமுக அரசு வாக்குறுதி கொடுத்தது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த உத்திரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .
விசாரணையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொது நல மனு குறித்து அரசு நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளனர் . அதாவது பழைய பென்ஷன் திட்டம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த உத்தரவு அமைந்திருக்கிறது . தற்பொழுது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த உத்தரவு மிகுந்த கவனம் பெற்று இருக்கிறது .எனவே பழைய பென்ஷன் விவகாரத்தில் அரசு நிலைப்பாடு என்ன என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



