
எலக்ட்ரானிக் யுகத்தில் சிங்கல்ஸை கவரும் வகையில், சில் டீக்குடிக்க 1500, படத்திற்கு செல்ல 2000ஆயிரம் என டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் விளம்பரம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நவ நாகரிக உலகில் எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மொபைல் போனில் வரும் வீடியோக்கள் தான் சற்று பொழுது போக்காக உள்ளது. சிலர் மொபைல் போன் மூலம் தங்களது திறமைகளைக் காட்டி வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமாகியவர்களும் உண்டு, அதே விடியோவால் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நின்றவர்களும் உள்ளனர்.
டிக் டாக் என்ற செயலிமூலம் பாட்டு பாடும் திறமை, நடன திறமையைக் காண்பித்து பலர் முன்னேறியுள்ளனர். படம் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதில் ஒரு சிலர் செத்த மூதேவியெனத் திட்டியே பிரபலமடைந்து இன்று லட்சக்கணக்கான அளவிற்கு வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
மற்றோரு தரப்பிலோ அறைகுறை ஆடைகளோடு இளைஞர்களைச் சூடேற்றி லைக்ஸ்களை குவித்தும் சம்பாதித்து வருகின்றனர். முன்பு காதலியைச் சந்திக்க காத்திருந்து காதல் கடிதம் கொடுத்த காலம் மலையேறிவிட்டது.
இன்ஸ்டாவில் சந்தித்த அடுத்த நொடி டேட்டிங் எனத் தற்போது நவீன காலமாக மாறிவிட்டது. லிவிங் டூக்கெதர் என்ற காலம் கடந்து ஒன் நைட் ஸ்டே என்ற நிலைக்கு இன்றைய தலைமுறை வந்துவிட்டது.இதில் அடுத்தகட்டமாக டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இளம்பெண் இன்ஸ்டாவில் விளம்பரம் செய்து இளைஞர்களைச் சூடேற்றிய சம்பவம் பரபரபாகியுள்ளது.
அந்த வகையில் டெல்லியை சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், சில்லான காபி குடிக்க 1500 ரூபாயும், திரைப்படத்திற்கு சென்று விட்டு இரவு உணவு சாப்பிடுவதற்கு 2000 ரூபாய் எனவும் நிர்ணயித்துள்ளார். குடும்பத்தினை சந்தித்து பேசுவதற்கு 3 ஆயிரம் ரூபாயென ரேட் பிக்ஸ் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அடுத்ததாகப் பைக்கில் நீண்ட தூரம் பயணம் செல்வதற்கு 4ஆயிரம் ரூபாயும் எனவும் இதில் கூடுதலாகக் கையைப் பிடித்துக்கொள்ளலாமெனக் கூடுதல் சலுகை அறிவித்துள்ளார். அடுத்ததாக டேட்டிங் சென்றதை சமூக வலைதளத்தில் போட்டோவாகப் பதிவிடுவதற்கு 6000 ரூபாயென ரேட் நிர்ணயித்துள்ளார்.
இதில் அடுத்த கட்டமாக வீட்டில் இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு 3500 ரூபாயும், வெளியில் ஷாப்பிங் செல்வதற்கு 4,500 சாகச பயணம் செல்வதற்கு 5ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளார். வார விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் வெளியூர் சுற்றுலா செல்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகும் விலை நிர்ணயித்து அட்டவணை வெளியிட்டு இளைஞர்களைக் கிரங்கடித்துள்ளார் அந்த இளம்பெண்.
இந்த இன்ஸ்டா வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவிற்கு கீழே அந்த இளம்பெண்ணை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இன்றைய இளைய சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

