Tamilisai : எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருக்காது- தமிழிசை 

எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருக்காது என முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் 11 ஆண்டு காலம் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நல்லாட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.


மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ், மற்றும் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருக்காது என கூறினார். மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார். பின்னர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பெண்களை பாதுகாக்காத அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும் என திமுக அரசை விமர்சனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *