அமெரிக்காவின் தலையீட்டால், இஸ்ரேல் கடும் விளைவுகளை சந்திக்கும்-அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை

அமெரிக்காவின் தலையீட்டால்,  இஸ்ரேல் கடும் விளைவுகளை சந்திக்கும் என  ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.

இதனை தொடர்ந்து, இஸ்ரேலுடன் போர் தொடங்கிய பிறகு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி முதன் முறையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர், ஈரான் வரலாற்றைப் பற்றி அறிந்த புத்திசாலிகள் ஈரானுடன் ஒருபோதும் அச்சுறுத்தும் மொழியில் பேசமாட்டார்கள் எனவும், ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அமெரிக்கா அதிபர் டிரம்பின் பதிவிற்கு பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து, அமெரிக்கா தலையிட்டால் போரின் விளைவு ஈடு செய்ய முடியாததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், அதற்காக உரிய தண்டனையை ஈரான் கொடுக்க உள்ளதாகவும் கூறினார்.

இஸ்ரேல்னின்,  தீவிரவாத ஆட்சியாளர்களுக்கு கருணை காட்டக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *