2023 Cricket World Cup: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

Advertisements

உலகக்கோப்பை தொடருக்காகக் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது…

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது இலங்கையில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதைதொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதிவரையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ரோகித் சர்மா தலைமையிலான உலகக்கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *