
தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கிராம நிர்வாக அலுவர்கள் சங்கத்தினரின் கோரிக்கையைப் பரிசீலித்துமுடிவெடுக்கத் தமிழக அரசுக்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. Madras High Court
சென்னை: தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி கிராம நிர்வாக அலுவர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சங்கத்தினர் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்கத் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை தடுத்து வருகிறோம். கொலை செய்யப்பட்ட பின்பு இழப்பீடு வழங்குவதில் எந்தப் பயனும் இல்லையென மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.இதற்குசென்னை உயர்நீதிமன்றம் சங்கத்தினர் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்கத் தமிழக அரசுக்குஉத்தரவிட்டுள்ளது.

