Murder: கணவனைக் கிணற்றில் வீசிய மனைவி!

Advertisements

Krishnagiri | Illicit relationship | Murder

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அடித்துக் கொலை செய்து உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிணற்றில் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்ட யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் காணாமல் போனவர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆத்துகாவாய் பகுதியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மைக்கேல்ராஜ் (36) காணாமல் போனது தெரிய வந்தது. இறுதியில் கொலை செய்யப்பட்டது மைக்கேல்ராஜ் (36) எனத் தெரிய வந்தது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஜோஸ்பின் சிந்து (28) விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, மைக்கேல்ராஜை அவரது மனைவி ஜோஸ்பின் சிந்து (28), கள்ளக்காதலன் விக்ரம் (19) ஆகியோரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் மகராஜகடை அருகே வசித்து வந்தார்.

கல் உடைக்கும் வேலைக்குச் சென்று வந்தார். அவர் வேலை செய்த அதே குவாரியில், கிருஷ்ணகிரி தர்மராஜா நகரைச் சேர்ந்த விக்ரம்(19) வேலை செய்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மைக்கேல்ராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்தபோது விக்ரமுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மைக்கேல்ராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை அறிந்த மைக்கேல்ராஜ் மனைவியைக் கண்டித்தார். கணவர் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என்பதால் இருவரும் மைக்கேல்ராஜை கொலை செய்து கயிற்றால் உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *