மும்மொழித் திட்டம் – அவசர நடைமுறைக்கு அண்ணாமலை எதிர்ப்பு!

Advertisements

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே, நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், 2026ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், சிபிஎஸ் அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, அந்த முடிவைத் தானும் வரவேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், சிபிஎஸ் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்குவது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-2030 கல்வியாண்டிலிருந்து மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மே 15ஆம் நாள் சிபிஎஸ் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்குத் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *