Advertisements

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கேப்டன் மில்லர். வரலாற்று ஜானரில் எடுக்கப்பட்டுள்ள கேப்டன் மில்லர் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மிரட்டலான காட்சிகள் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
அணமையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ வரும் 22ம் தேதி வெளியாகும் என்று, முகத்தை மூடியபடி துப்பாக்கியுடன் தனுஷ் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுதியுள்ளார்.
Advertisements

