Murder: விமானப் பணிப்பெண் கொலை!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் விமானப் பணிப்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

மும்பை மரோலில் வசிக்கும் ரூபால் ஓக்ரே (24) ஞாயிற்றுக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டார். சத்தீஸ்கரை சேர்ந்த இவர், ஏர் இந்தியாவில் கடந்த ஏப்ரலில் பயிற்சிக்காக இணைந்தார்.

ரூபால் தனது சகோதரி மற்றும் அவரது காதலனுடன் மரோலில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். சகோதரியும், காதலனும் எட்டு நாட்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டாகப் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

 

இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *