
தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் பல்வேறு நாடுகள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, மத்திய அரசு எரிவாயு சிலிண்டரின் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
அந்த வகையில், மாத தொடக்கமான இன்று தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 46 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 283 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தொடர் விலை உயர்வால் ஹோட்டல்கள் மற்றும் அது சார்ந்த பிற தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன..


