
தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி செல்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், கடந்த மாதம் 10 ஆம் தேதி முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்குத் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்குச் சென்று உரையாற்ற உள்ளார்.
முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக விஜய் திருச்சிக்குச் செல்வதால் தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். மேலும், முதலமைச்சர் வருகையொட்டி இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.



