Actor Vishal: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!

Advertisements

தனக்கும் லைகா நிறுவனத்தும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் தங்களுக்கு கடன் செலுத்த வேண்டி உள்ளதாகவும், தங்களுக்கு தர வேண்டிய தொகையை விஷால் திருப்பித்தர உத்தரவிடக்கோரியும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தது.  இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், தன் மீது லைகா நிறுவனம் அவதூறு பரப்புவதாக நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை என்றும், தான் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி தனக்கு எதிராக லைகா அவதூறு பரப்புவதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய பட வாய்ப்புகளை லைகா நிறுவனம் தடுக்க முயற்சிப்பதாகவும், தனக்கும் லைகா நிறுவனத்தும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஷால் தரப்பு கோரிக்கைபற்றிப் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜன.22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *