Lok Sabha Election 2024: தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடக்கம்!

Advertisements

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டித் தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டித் தபால் வாக்குகளைப் பெறும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இன்று (04.04.2024) முதல் ஏப்ரல் 6-ம் தேதிவரை 3 நாட்களுக்குக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது.

இந்த நாட்களில் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *