Lok Sabha Election 2024: நடிகர் ரஜினி, பிரபு மற்றும் திரை பிரபலங்கள்ஆர்வமுடன் வாக்களிப்பு!

மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலையிலிருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சிறிய பிரச்சினைகள் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடந்தது.இந்தநிலையில்

வாக்குப்பதிவிற்காகக் காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *