
தூத்துக்குடி தொகுதியை நாடார் சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும், கனிமொழிக்கு கொடுத்தால் நாங்கள் தோற்படிப்போம் என நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடார் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் போரூரில் நாடார் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்ட நிலையில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்குறித்து மாநிலத் தலைவர் முத்துரமேஷ் நாடார் பேட்டியாக அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:நாடாளுமன்றத் தேர்தலில் நாடார் சங்கத்திற்கு தொகுதிகளை வழங்க வேண்டும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் நாடார் வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் ராஜ்யசபா உறுப்பினர் போன்ற பதவிகளை நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.காமராஜர் பெயரை மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு சூட்ட வேண்டும்.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் பெயரைச் சூட்ட வேண்டும்.ஜிஎஸ்டி வரியை வசூலித்துக் கொடுக்கும் தொழில்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இந்த அறிக்கைகளைத் தேர்தல் அறிக்கையாகக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்களது வாக்குகளஅவர்களுக்குசெலுத்த மாட்டோம். அவர்களுக்கு எதிராகத் தின்னை பிரச்சாரம் செய்வோம்.
வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு நாடார் சமுதாயத்திடம் உள்ளது.நாடார் சமுதாயம் சார்பாக நாடார் வேட்பாளர் இல்லை என்றால் நாங்களே வேட்பாளரை நிறுத்தி அரசியல் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிப்போம்.
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது நாடார் சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் தோற்கடிப்போம் என முத்துரமேஷ் கூறினார்.



