
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 200 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 215 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


