Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை!

Advertisements

கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது.

மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான சசி தரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்றும் 12 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது. வருகிற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவதே இறுதியாகும். இனி மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *