Nepal : ப*லி எண்ணிக்கை165 ஆக உயர்வு ; 579 பேரைத் தேடும் பணி தீவிரம்.!

நேபாளத்தில் திடீர்ப் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. மேலும் 579 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நுவாக்கோட் மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் நேற்றுத் திடீரெனப் பெருவெள்ளம் பாய்ந்து கரையோரப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்த 165 பேரின் உடல்களை இதுவரை மீட்டுள்ளதாக நேபாளப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த 466 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 113 பேர் என மொத்தம் 579 பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளில் 105 பேரைக் காணவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போனோரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நேபாளப் பேரிடர் மீட்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *