Lok Sabha Election 2024: நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் அமித்ஷா!

Advertisements

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வெள்ளிக்கிழமை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. பிரசாரத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.

சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்து பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நாளை மறுநாள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வருகிறார்.

வெள்ளிக்கிழமை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *