இந்தியாவில் 2.2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சரக்குப் போக்குவரத்துத் துறை…!

இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறை ஆண்டுக்கு 460 கோடி டன் சரக்குகளைப் பரிமாற்றம் செய்வதாகவும், இதனால் 2 கோடியே 20 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சரக்குப் போக்குவரத்து மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலியில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, சரக்குப் போக்குவரத்துக்கான செலவைக் குறைத்தல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தல், ஏற்றுமதியை வலிமைப்படுத்தல், சிறுகுறு நடுத்தரத் தொழில்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் மூலமே 5 இலட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று தெரிவித்தார்.

சரக்குப் போக்குவரத்துக்கான கொள்கை மூன்றின் மூலம் வேகம், அளவு, நீடித்த தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றால் சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைக்க முடியும் என்று கூறினார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு இப்போது 14 முதல் 16 விழுக்காடாக உள்ளதாகவும், சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இதை ஐந்து முதல் 5 விழுக்காடாகக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *