லெவல் கதையில் வடிவேலு – மாரி செல்வராஜ் இணையும் புதிய படம்!

Advertisements

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மாமன்னன் திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் அதனை படக்குழு கொண்டாடி வருகிறது. இந்த திரைப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலுவின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Advertisements

ஆம், அதாவது, 1997 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது வென்ற “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்” என்ற படத்தை ரீமேக் செய்து அதில் நான் நடிக்க நீ இயக்க வேண்டும் என்று வடிவேலு ஆசையாக மாரி செல்வராஜிடம் கூறியதாக சமீபத்திய பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

தற்போது, அப்படத்திற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும் அதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *