காணாமல் போன ஜெகதீப் தன்கர்: பின்னணியில் மர்மம் .!

Advertisements
புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்வு செய்யும் நிலையில் ஏற்கனவே பதவி வகித்து ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் காணாமல் போன விஷயம் நாடு முழுவதும் பரபரப்பு அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது .
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 14 வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார் வருகிற 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி தான் அவரது ஐந்தாண்டு பதவி காலம் முடிகிறது இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் .
உடல்நிலை சரி இல்லை எனக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்று சொல்லி அவர் ராஜினாமா செய்தார் அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டது பிரதமர் மோடியும் உடனடியாக ஜெகதீப் தன்கருக்கு ஓய்வு கால வாழ்த்துக்களை பதிவு செய்தார் .
அவரது திடீர் ராஜினாமாவும் அது ஏற்கப்பட்ட விதமும் பிரதமரின் வாழ்த்து செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது . ஜகதீப் தன்கர் ராஜினாமா பின்னணியில் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ராஜினாமா செய்த மறுநாள் முதல் ஜெகதீப் தன்கர் மாயமாகிவிட்டார் இப்போது வரை அவர்எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது பற்றி  வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை .
இது குறித்து அவரது குடும்பத்தினரோ அவரது அலுவலக அதிகாரிகளோ ஜெகதீப் தன்கர் இருப்பிடம் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை ஜெகதீப் தன்கரும் பொதுவெளியில் தோன்றவில்லை . இதற்கிடையே ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மாலை நான்குமணிக்கு பிறகு என்ன நடந்தது? அவரது ராஜினாமாவுக்கு அழுத்தம் தரப்பட்டதா? அவர் அவமானப்படுத்தப்பட்டாரா? வேறு அரசியல் கணக்குகள் போட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதா ?இல்லை என்றால் தன்னால் அரசுக்கு ஏற்பட்ட தர்ம சங்கடங்கள் விளைவாக நாமே முன்னதாக விலகி கொள்ளலாம் என்று அவர் முடிவு எடுத்தாரா என்பது தெரியவில்லை
இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறும்பொழுது ஜெகதீப் தன்கர் குறித்த பிரச்சனைகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரது இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறி இருக்கிறார் . இதே சமயத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் பேசும்போது ஜெகதீப்தன்கர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன அவருடைய  அலுவலக அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை அவரது இருப்பிடம் பற்றி அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகிறது என்று கூறி இருக்கிறார்
இதே போல் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறும் பொழுது ஜகதீப் தன்கரும் பாஜகவை சேர்ந்தவர் தான் பாஜக தான் அவருக்கு பதவி கொடுத்தது.அவரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் இரண்டு மணிக்கு அவர் வெளியே சென்ற போது எத்தனை அமைச்சர்கள் அவருடன் புறப்பட்டு போனார்கள் அவரைக் கண்டறியும் பொறுப்பு இந்த நாட்டுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் . இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜெகதீப் தனகர் குறித்து நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *