Rafale : இந்தியா- பிரான்ஸ் இடையே ரபேல் ஒப்பந்தம்!

Advertisements

இந்தியா- பிரான்ஸ் இடையே  63,000 கோடி ரூபாயில் 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளநிலையில்,  தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பிரான்சிடம் இருந்து 63,000 கோடி ரூபாயில்  ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், மற்றும் இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா- பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாகிறது. மேலும், இந்த விமானத்தில் கடல்சார் இலக்கு உட்பட கடற்படை போருக்கு ஏற்றபடி ரேடார், மின்னணு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *