Lee Hsien Loong: சிங்கப்பூர் புதிய பிரதமர் மே 15ல் பொறுப்பேற்பு!

Advertisements

சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், மே 15ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து புதிய பிரதமராக அந்நாட்டு துணை பிரதமரும், நிதிஅமைச்சருமான லாரன்ஸ் வோங்க் பொறுப்பேற்க உள்ளார்.

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அடுத்த மாதம் 15ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமராக லீ சியான் லூங் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ அடுத்த மாதம் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் லீ தனது பேஸ்புக் பதிவில், ‘‘ கடந்த நவம்பரில் நான் பதவியில் விலகுவது குறித்த எனது முடிவை அறிவித்தேன். மே 15ம் தேதி நான் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன்.

அதே நாளில் துணை பிரதமரான லாரன்ஸ் வாங் அடுத்த புதிய பிரதமராகப் பதவியேற்றுக்கொள்வார்.எந்த நாட்டிலும் தலைமை மாற்றம் என்பது மிகவும் குறிப்பிடத் தக்க தருணமாகும். லாரன்ஸ் மற்றும் 4ஜி (நான்காவது தலைமுறை) குழுவானது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைத்துள்ளனர். 4 ஜி குழுவானது சிங்கப்பூரை சிறப்பாகச் செயல்பட வைப்பதற்கும், முன்னேற்றுவதற்கும் உறுதி பூண்டுள்ளது. லாரன்ஸ் மற்றும் அவரது குழுவிற்கு மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து புதிய பிரதமராக அந்நாட்டு துணை பிரதமரும், நிதிஅமைச்சருமான லாரன்ஸ் வோங்க் பொறுப்பேற்க உள்ளார்.

இதையடுத்து 20 ஆண்டுகள் வகித்த பிரதமர் பதவியைத் துணை பிரதமரிடம் ஒப்படைத்தார். லீ சியான் லூங் பதவி விலகும் அதே நாளில் (மே 15), சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங்க் பொறுப்பேற்க உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *