தமிழ்நாடு அரசும்-ஆளுநரும் மோதல் போக்கைக் கைவிட வேண்டும் !

Advertisements
தமிழ்நாடு ஆளுநரும் அரசும் தங்களிடையே உள்ள மோதல் போக்கைக் கைவிட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம்  ஆகிய 8  பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை என்றும், துணைவேந்தர் கையொப்பமில்லாமல் வழங்கப்படும் பட்டங்களுக்கு மதிப்பில்லை என்றும் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்  என்று இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *